பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வழியில் தம்பதியினர் இரு சக்கிர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண்ணின் கையிலிருந்த செல்போனை மர்ம நபர்கள் திடீரென பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்ற போது சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காததால் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்துள்ளனர்.
அப்போது கணவன்-மனைவி இரண்டு பேரும் திருடன் என கூச்சலிட்டதில் அருகிலிருந்தவர்கள் மர்ம நபர்களை துரத்திச் சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் பள்ளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.