இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அற்புதபுரம் பகுதியில் அடைக்கலராஜ்-ஆனந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்தி இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்துள்ளனர். இதனையடுத்து மர்ம நபர்கள் ஆனந்தியின் இருசக்கர வாகனத்தை தள்ளி விட்டதோடு அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை திருடி சென்றனர்.
இதில் கீழே விழுந்த ஆனந்தி பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் காவல்துறையினர் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.