பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக வேட்பாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் சமுத்திர பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் வள்ளியூர் யூனியன் 3-வது வார்டு கவுன்சிலர் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை சமுத்திர பாண்டி தட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பாலகிருஷ்ணனின் மனைவியை சமுத்திர பாண்டி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணனின் மனைவி வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சமுத்திர பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.