Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செயலிகளில் பெற்ற கடன்…. பெண்ணை மிரட்டிய நிர்வாகிகள்…. போலீஸ் விசாரணை…!!

செல்போன் செயலிகளின் நிர்வாகிகள் கடனை செலுத்தவில்லை என கூறி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரியம்பாளையம் பகுதியில் சுவாதி என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுவாதி கடன் பெறுவதற்காக தனது செல்போனில் 30-க்கும் மேற்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து சுவாதி 74 ஆயிரம் ரூபாய் வரை கடன் தொகையை செலுத்தியுள்ளார்.

ஆனால் அந்த செயலிகளின் நிர்வாகிகள் சுவாதியை தொடர்பு கொண்டு கடனை முறையாக செலுத்தவில்லை என கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் சுவாதியின் பான் கார்டை தவறாக சித்தரித்து அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சுவாதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |