பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில் செல்வக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை தவறான எண்ணத்துடன் கேலி கிண்டல் செய்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செல்வகுமார் அந்த பெண்ணின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அவருக்கு செல்வகுமார் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதன்பின் வந்த பெண்ணின் செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் ஆபாச வீடியோ அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வக்குமாரை கைது செய்தனர்.