கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். மெடிக்கல் ரெப் ஆக பணியாற்றி வரும் இவருக்கும், பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோஷி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சதீஷ் குடித்துவிட்டு ஜோஷி இடம் தினமும் சண்டை விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோசி சதீஷ்சை பிரிந்து கடந்த ஒரு வருடமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் விவாகரத்து கேட்டு கணவர் சதீஷ்க்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜோஷி, இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அடிக்கடி குடித்து விட்டு ஜோஷி வேலை செய்யும் இடத்திற்கு வந்து தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி ஜோஷி வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்திற்கு சென்ற சதீஷ் விவாகரத்து தொடர்பாக ஜோஷி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோஷியை சரமாரியாக குத்த ஆரம்பித்தார்.
சத்தம் கேட்டு அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த மற்ற ஊழியர்கள் ஓடிவந்து ஜோஷியை காப்பாற்ற முயன்றனர். தாக்குதல் நடத்திய சதீஷ்சை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கத்தி குத்து பட்டு ஜோஷியின் இடது விலா எழும்பு உடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சதீஷ்சை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.