Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்…. “ஸ்வச்சதா குறை தீர்ப்பு”…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ஓய்வவூதியதாரர்களின் வாழ்வை எளிதாகவும், குறைகளை தீர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்வச்சதா பென்ஷன் குறை தீர்ப்பு முகாம் அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முகாம் முடிவடைகிறது. இதுகுறித்து மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்சன நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 3150 பென்ஷன் சார்ந்த குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 4200 குறைகளை தீர்ப்பதற்கு இலக்கு வைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 21ஆம் தேதி வரை 3150 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அனைத்து குறைகளையும் உரிய நேரத்துக்குள் தீர்ப்பதற்கு மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பென்ஷன் சார்ந்த விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளின் தளர்த்துவதற்காக 30 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் 3094 ஆவணங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 26 தூய்மை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும்‌ என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |