கொட்டாரம் அருகில் பிரிட்ஜை சுத்தம் செய்வதற்காக சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நரிக்குளம் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். ஆறுமுகம் இறந்ததை அடுத்து அவரது மனைவி ஏசுவடியாள் அதே ஊரில் வசிக்கும் தம்பி வீட்டில் மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் பசு மாடுகளை வைத்து பால் விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏசுவடியாள் தனது வீட்டில் இருக்கும் பிரிட்ஜை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்ட்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் ஏசுவடியாளை மருத்துவர் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.