கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் நாமக்கல் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என 48 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மருத்துவர்கள் ஆகியோர் கைகளை தட்டி பழ வகைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.