Categories
உலக செய்திகள்

கொரோனா மருந்து கூட ரெடி…? ஆனால் இது சரியில்ல….. புலம்பும் மக்கள்….!!

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதில், பல நாடுகள் இன்றளவும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இதனுடைய பாதிப்பும் ஆங்காங்கே அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

எனவே இந்த பிரச்சனைக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், உலக நாடுகள் அதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  அடுத்த ஆண்டுக்குள் தடுப்பு ஊசிகள், மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பது உள்ளிட்ட தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், சந்தோஷம். ஆனால், உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்தும் சோதனைகள் எதுவுமே covid-19 வைரஸ் பாதிப்பு இருப்பதை 100% உறுதிப்படுத்த கூடியவை அல்ல என்பதும் மற்றொரு உண்மையாக இருக்கிறது. உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கூட உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பல குளறுபடிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |