Categories
உலக செய்திகள்

காபூல் விமானநிலையத்தில் 40 டாலருக்கு விற்கப்படும் தண்ணீர்.. பசியால் வாடிய குழந்தைகள்.. ஆறுதல் கொடுக்கும் இராணுவம்..!!

காபூல் விமானநிலையத்தில், அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், சில குழந்தைகள் தண்ணீரீன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். எனவே, தங்கள் ஆட்சியை நிலைநாட்ட தீவிரமாக பல நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள். எனவே அவர்களின் கொடூர ஆட்சிக்கு அஞ்சிய மக்கள் நாட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில், ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர்களுக்கு விற்கப்படுகிறது.

அதாவது 3000 ரூபாய். ஒரு தட்டு சாப்பாடை, 100 டாலருக்கு விற்கிறார்கள். இந்த கடுமையான சூழலில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தினர் தான் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவி வருகிறார்கள். விமான நிலையத்திற்கு, அருகே தற்காலிகமாக குடியிருப்புகளை கட்டி மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சாப்பாடு கொடுத்து உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு, சிறிது ஆறுதல் கிடைத்துள்ளது.

Categories

Tech |