Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் “உயர்ந்து கொண்டே இருக்கும் குடிநீர் விலையால் பொதுமக்கள் அவதி!!…

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுக்கள் குடிநீரை அதிகவிலைக்கு வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

சென்ற ஆண்டு போதிய அளவு கன மழை இல்லாததால் ஏரிகளில் நீர் வரத்து மோசமான நிலையில் குறைந்துள்ளது குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கும் செம்பரம்பாக்கம் சோழவரம் பூண்டி ஆகிய ஏரிகள் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 850 லிட்டர் தேவைப்படும் நிலையில் வெறும் 550 லிட்டர் மட்டுமே தற்போது அரசால் விநியோகம் செய்ய முடிகிறது இதனால் சென்னை குடியிருப்புவாசிகள் தண்ணீர் பஞ்சத்தால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னைவாசிகள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மாதம் தோறும் 30 ஆயிரத்திற்கும்  , குடிசைப் பகுதிகளில் வசிப்போர் அவர்களது தெருக்களுக்கு வரும் லாரிகளில் குடம் பத்து ரூபாய்க்கும் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்த காரணத்தினால் அங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பலர் தங்களது வீடுகளை காலி செய்து தண்ணீர் இருக்கும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் அதில் குறிப்பிட்டிருப்பதாவது தமிழகத்தில் குறிப்பாக சென்னை பகுதியில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக நிலவுவதால் இந்தப் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் தினந்தோறும் தண்ணீரை அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான அளவில் வழங்க வேண்டும் என்றும் கூடுதலாகவோ குறைவாகவோ வழங்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |