Categories
மாநில செய்திகள்

மக்களே : மீண்டும் விலை உயர வாய்ப்பு….. புயலால் வந்த சோதனை….!!

தொடர் மழையின் காரணமாக செடியிலேயே சின்ன வெங்காயம் அழுகி வருவதால் விவசாயிகள் அதனைப் பிடுங்கி சாலையில் கொட்டி வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள சின்ன உடைப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி முறையில் மூன்று மாத பயிரான சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிட்டு கார்த்திகை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். ஆனால் இந்த மாதம் அறுவடை செய்யும் தருவாயில் பயிர்களை இழந்துள்ளனர் விவசாயிகள். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை பெய்ததால் சின்னவெங்காயம் செடியிலேயே அழுகி வீணாகியது.

அழுகிய வெங்காயத்தை பிடுங்கி விவசாயிகள் சாலையில் கொட்டி வேதனை தெரிவித்துள்ளனர். உரம், பராமரிப்பு, விதை என்று ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கு மேல் செலவு ஆவதால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோல் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெங்காய விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |