தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 16-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தென்மேற்கு கடலில் உருவாகியுள்ள நிலையில் தற்போது தென் கிழக்கு வங்க கடல் பகுதியிலும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அந்தமான் அருகே உருவாகக்கூடும். இதனையடுத்து தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் அதற்கு மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று அதற்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையானது திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது