Categories
உலக செய்திகள்

இந்த நாட்டிலும் தடை செய்யப்படுமா..? பரபரப்பான வாக்கெடுப்பு… விவசாயிகள் எச்சரிக்கை..!!

சுவிட்சர்லாந்தில் இன்று பல முக்கிய திட்டங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சுவிட்சர்லாந்து மக்கள் இன்று செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்யும் திட்டத்திற்கு வாக்களிக்க உள்ளனர். மேலும் சுவிஸ் குடிமக்கள் அவசர கொரோனா நிதி, fossil fuels-களுக்கான புதிய வரி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட பிற திட்டங்கள் குறித்த வாக்கெடுப்பு ஆகியவற்றிலும் இன்று வாக்களிக்க உள்ளனர். பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்தும் மருந்துகள் உயிரியல் அல்லது ரசாயன மருந்துகள் ஆகும். இந்த செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள் பத்து வருடங்களுக்குள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும், இதனை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மானியங்களை நிறுத்த வேண்டும் என பிரச்சாரகாரர்களால் திட்டங்கள் முன்மொழியப்பட்டு வந்தது.

இந்நிலையில் பூச்சிகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிற்கு இந்த பூச்சிக்கொல்லி மருந்தால் பாதிப்பு ஏற்படுவதால் பூச்சிக்கொல்லியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய தொழிலை இந்த திட்டங்கள் கடுமையாக பாதிக்கும் என்று சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே நாட்டில் எடுக்கப்படும் அனைத்து முக்கிய முடிவுகளும் சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிப்பை கருத்தில் கொண்டே எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் சுவிட்சர்லாந்து நாட்டில் பூச்சி கொல்லி மருந்து தடை செய்யப்பட்டால் உலகிலேயே இரண்டாவதாக பூச்சிக்கொல்லிக்கு தடை விதித்த நாடாக சுவிஸ் திகழும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உலகிலேயே முதன்முறையாக ரசாயனங்களுக்கு தடை விதித்திருப்பது பூட்டான் நாடு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |