தமிழகத்தில் இன்று 6,020 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 68,179 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 31,09,708 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 5,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,90,907 ல் இருந்து 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808 ல் இருந்து 4,927 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று 6,020 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,32,618 ல் இருந்து 2,38,638 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 80.38 % பேர் குணமடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 53,336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று குணமடைந்தவர்களை விட பாதிப்பு அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.