இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பாலில் 38 சதவீதம் தரமற்றவை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய உணவு மற்றும் பாதுகாப்பு தர ஆணையம் நாடு முழுவதும் 1103 நகரங்களிலிருந்து 1432 பாக்கெட் பால் மாதிரிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வறிக்கையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் அகர்வால் வெளியிட்டார். அப்போது பேசிய அவர் பதப்படுத்தப்பட்ட பால் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆப்லாடாக்சின் எம் 1 என்ற ரசாயனம் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளதாக தெரிவித்தார். கொழுப்புக்கள் , சர்க்கரை உள்ளிட்டவைகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பாலில் 38% தரமற்றது என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார் இது போன்ற தூய்மையான பாலை தொடர்ந்து குடித்தால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி 1-ஆம் தேதிக்குள் அனைத்து பால் தயாரிப்பு நிறுவனங்களும் விதிமுறைகளுக்கு ஏற்ப தரமான பாலை தயாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் இந்த காலத்துக்கு பிறகு பாலில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.