புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 26-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து மேற்கு நோக்கி சென்று விட்ட போதிலும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. சென்னையில் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யவில்லை. கரூர், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்திகிராமம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்தது.
கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் கரூர் மாவட்டத்தில் எழுபதுக்கும் அதிகமான குடிசை வீடுகள் இடிந்து இருப்பதும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் வெள்ளம் தேங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடலூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. பண்ருட்டி, பூண்டி, யாங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது.
இதனால் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனிடையே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வரும் 26-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.