செய்தியாளரிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் சில பிரச்சனைகள் நடக்கின்றது. ஆனால் அது சம்பந்தமா, கிட்டத்தட்ட 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்கிறார்கள், அதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை போல ஒரு வருஷத்தில் ஆங்கங்கே சம்பவம் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் துரிதமிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்ற அதிமுக ஆட்சியை பொருத்தவரைக்கும் இந்த மாதிரி பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஊடக நண்ர்கள், எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து, கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் நடவடிக்கை எடுத்தார்கள். அந்த மாதிரி இப்ப கிடையாது. தவறுகள் இல்லை என்று சொல்லவில்லை, ஒன்று, இரண்டு சம்பவம் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் நடவடிக்கை எடுத்து விடுகின்றார்கள்.’
குற்றமே நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் தான் திருந்த வேண்டும். குற்றமே நடக்கக்கூடாது என்றால், அது அரசாங்கத்தாலையோ, காவல்துறையினாலோ செய்ய முடியாது. மக்கள் தான் அதற்கு உண்டானதை செய்ய வேண்டும். மக்கள் திருந்தவில்லை என்றால், இந்த மாதிரி தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கும்.
கோவை குண்டுவெடிப்பை பொருத்தப்பட்டில், அந்த சம்பவங்கள் நடந்து, 24 மணி நேரத்திற்குள்ளேயே அது சம்பந்தமான ஐந்து நபர்களை கைது செய்தார்கள். நேற்று கூட இறந்தவருடைய உறவினரை கைது செய்து இருக்கிறார்கள். அதற்கு உண்டான விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது. இதுல வந்து தமிழ்நாடு காவல்துறை சரியான முறையில் செயல்படல என்று பாஜக தலைமையினுடைய கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது தெரிவித்தார்.