Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்…! ”இன்னும் 2 நாளைக்கு இப்படி தான்” சும்மா வெளிய போகாதீங்க…!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அம்பன் புயல் நம்மை விட்டு விலகிச் சென்று அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகப்படியாக பதிவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. அதற்கு முன் தினம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கின்றது. அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி உள்ளது. இதுதான் இந்த ஆண்டு அதிக பட்ச வெப்பநிலை. இன்றைக்கு சென்னையில் பல இடங்களில் வெயில் அதிகமாக இருந்து வருகின்றது. அதே போல வட தமிழகத்தில் சில இடங்களில் அனல் காற்று வீசி வருகின்றது.

இந்நிலையில் அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு அனல் காற்று நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த நிலை மாறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இந்த மழை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை இருக்காது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியில் யாரும் செல்ல வேண்டாம் என்ற ஒர் அறிவுறுத்தலையும் கொடுத்துள்ளது.

Categories

Tech |