Categories
கன்னியாகுமாரி திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ரூ12,50,000 மோசடி…. நெல்லை, குமரியை சுற்றி வலம் வரும் கள்ளநோட்டுகள்…!!

நெல்லையில் தொழிலதிபரிடம் கள்ளநோட்டு கொடுத்து  ரூ12,50,000 மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். 

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வில்பரின். இவர் பால் பண்ணை தொழில் அதிபரும், ஜவுளி மொத்த வியாபாரியும் ஆவார். இந்நிலையில்  இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தயாளு என்பவருக்கும் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது தொழிலை பெருக்க ஒரு கோடி ரூபாய் கடன் வேண்டும் அதை வாங்கி தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதன்படி,

தனது நண்பர்கள் 5 பேரை தொடர்பு கொண்ட தயாளு ரூ12,50,000 கமிஷன் கொடுத்தால் ஒரு கோடி கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர். அதன்படி ரூ12 ½ லட்சம் ரூபாய் கமிஷனாக கொடுத்துள்ளார் வில்பரின். மேலும் ஒரு கோடி ரூபாய் பகுதி பகுதியாகத்தான் தரப்படும் என்றும் தெரிவித்த அந்த கும்பல்  நெல்லை பேருந்து நிலையத்தில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளுடன் அவரிடம் ஒரு பை கொண்டு வந்து கொடுத்தனர்.

அதனை பிரித்துப் பார்த்த பொழுது அனைத்தும் போலி ரூபாய் நோட்டுகள் அதில் குறிப்பிட்ட திரவியம் தடவினால் உண்மையான ரூபாய் நோட்டாக அது மாறிவிடும் என்று அந்த மர்ம கும்பல் தெரிவித்தது. இதையடுத்து எனக்கு போலி ரூபாய் நோட்டுகள் வேண்டாம் உண்மையான ரூபாய் நோட்டுகள் தான் வேண்டும் என்று வில்பரின் வாக்குவாதம் செய்ய 5 பேர் கொண்ட அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றதையடுத்து நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி உடனடியாக தாமதிக்காமல் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டதால்  தயாளு மணிகண்டன் முனீஸ்வரன் சங்கரேஸ்வரன்ஆகியோர் கைது செய்யப்பட கருப்பசாமி என்பவர் மட்டும் வேறொரு பேருந்தில் தப்பிச் சென்றுவிட்டார்.

பின் இது குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் இதே கும்பல் ஏற்கனவே பலரிடம் கள்ள நோட்டுகள் கொடுத்து ஏமாற்றி வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த கும்பலால் விநியோகிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் அதிக அளவில் வலம் வருகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |