சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, முகாம்களிலும் பரவி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு இதுவரையில் 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. முதலில் சிறைத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவருக்கு பரவியது கடந்த 13-ஆம் தேதி தான் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தான் கொரோனா தன் வேலையே காட்ட ஆரம்பித்து விட்டது. ஆம் கொரோனா தொற்று சிறையில் வேகமாக பரவி வருகின்றது. அதேசமயம் ஜின்ஜியாங் உய்குர் (xinjiang uyghur) பகுதியில், பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் சிறுபான்மையினர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுபோன்ற முகாம்களில் கொரோனா தொற்று பரவி விடுமோ என அஞ்சம் ஏற்படுகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி சோதனை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக சீன அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.