இத்தாலியில் புகையை மட்டும் வெளியேற்றி வந்த ஸ்ட்ராம்போலி எரிமலை திடீரென நெருப்பு பிளம்பை தெறிக்க விடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாகும். இங்கு சுற்றுலா பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர். இந்த கடலை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலையானது உலகிலேயே அதிக செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகளில் ஒன்று என ஜியாலஜி டாட் காம் (geology.com) என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்ட்ரோம்போலி எரிமலை 1932-ம் ஆண்டு முதலே அடிக்கடி சீறி வருகின்றது. கடந்த 2 நாட்களாக இது புகையையும் சாம்பலையும் மட்டும் வெளியேற்றி வந்தது. இந்நிலையில், 3,000 அடி உயரத்தில் உள்ள எரிமலையில் இருந்து நேற்று இரவு திடீரென எரிமலை குழம்புகள் தீப்பொறியாக பல அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்து தெறிக்கின்றன.
இந்த லாவா பிளம்பு மலையில் இருந்து இறங்கி வரும்போது நெருப்பு பொறிகள் வெளிப்பட்டு சிதறுவதை கண்ட மக்களை அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் அப்பகுதிக்கு கடற்கரைக்கும், கடலுக்கும் மக்கள் செல்லக்கூடாது எனதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அச்சம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.