முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிய கொலை செய்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 7ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து வினோத்தை அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதனால் வினோதிற்கு அதிகமான வெட்டு காயங்கள் கால்களில் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து படுகாயமடைந்த வினோத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு ஆய்வு செய்து வினோத்தை வெட்டி விட்டு தப்பி ஓடிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் வெள்ளைச்சாமி மற்றும் இலுப்பூர் தாலுகாவை வசிக்கும் ராம், சுரேந்திரன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்விரோதம் காரணமாக வினோத்தை வெட்டிக்கொலை கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.