Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்க முடியாது… அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

கொரோனா தொற்றின் 2 – வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் சலூன், தேநீர் மற்றும் டாஸ்மார்க் கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.  இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடக்கு வாணக்கன்காட்டு பகுதியில் வசிக்கும் சந்திரமோகன் என்பவர் தனது வீட்டில் இருக்கும் பேரல்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 5 லிட்டர் சாராயம் போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு, சந்திரமோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மணமேல்குடி பகுதியில் வசிக்கும் அய்யாசாமி என்பவர் அவருடைய கூட்டாளிகளான சதாம் உசேன், முகமது இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கிருந்த 90 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆலங்குடி காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆம்புலி ஆற்றுப்பகுதியில் சாராயம் விற்ற ரமேஷ் என்பவரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் முதலியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |