அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.ஆர் சரஸ்வதி, தமிழக முதல்வரால் நிம்மதியாக தூங்க முடியல. இன்னைக்கு இருக்கிற விடியல் ஆச்சு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா ? ஓசின்னு சொன்னத மட்டும் எங்க அம்மா கேட்டிருக்கணும்… நாங்க மேடையில பேசுவோம்…
இலவசமா தாரோம்னு.. அதுக்கே கூப்பிட்டு திட்டுவாங்க. என்ன இலவசம்னு சொல்லுறீங்க ? என்ன இலவசம்னு சொல்றீங்க ? எது இலவசம் ? அவங்க அரசாங்கத்துக்கு வரி கட்டுறாங்க. மக்களோட வரி பணத்தில் தான் அரசாங்கம் நடக்குது. அந்த அரசாங்க பணத்தில் இருந்து, நான் அவங்களுக்கு ஏதாவது செய்றேன். விலை இல்லாமல் என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, ஓசின்னு என்று சொல்லக்கூடாது, இலவசம்னு சொல்லக்கூடாது.. அதுதான் தலைமை. அதுதான் அம்மா. அதுதான் அண்ணா திமுக ஆட்சி.
எடப்பாடி யார்? அப்படித்தானே போஸ்ட் ஓட்டுறாங்க.. உண்மையிலே சொல்லுறேங்க. எடப்பாடி பழனிசாமியை மரியாதைக்குரிய சின்னமாவும், மரியாதைக்குரிய டிடிவி சாரும் முதலமைச்சர் என்று அறிவித்த உடனே மக்கள் கேட்டாங்க… யாருங்க இவரு ? ஓபிஎஸ் யாருன்னு தெரியும். யார் இந்த எடப்பாடி? அதை தான் அவுங்க இன்னைக்கு போடுறாங்க.
எடப்பாடி யார்? எடப்பாடி யார் மூலமாகத்தான் திமுக ஆட்சிக்கு வந்ததே தவிர.. நான் தமிழக மக்களை குறை சொல் மாட்டேன். ஒருங்கிணைந்து இன்றிருந்தால் கண்டிப்பா நீங்க டிடிவி சாரை சந்தித்து இருக்கணும், நீங்க சின்னமாவை சந்தித்து இருக்கணும், அம்மா ஆட்சி இன்னைக்கு வந்து இருக்குமா இல்லையா? என கேள்வி எழுப்பினார்.