Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… நாளை முதல் சொல்லிட்டாங்க… முக்கிய அறிவிப்பு …!!

கேரள மாநிலத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இம்மாதம் 15ம் தேதி பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாக 28ஆம் தேதி தொடங்குவதாகவும்,  பத்தினம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் கனமழை பெய்யத் தொடங்கும் என கூறியுள்ளது.

கடந்த ஆண்டாக இருந்தாலும்,  சரி அதற்கு முந்தைய ஆண்டாக இருந்தாலும் சரி கேரளா கனமழையால் படாத பாடுபட்டது. ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி உள்ளது.

Categories

Tech |