Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… இதெல்லாம் செய்யாதீங்க… வந்தாச்சு சட்டம்..!!

வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்துள்ளது. ஆனால் பொதுமக்கள் இதனை அலட்சியப்படுத்தாமல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளவேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகுந்த அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இதுகுறித்த சட்டமானது மக்களவை கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இது குறித்து தாக்கல் செய்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதில், விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |