Categories
மாநில செய்திகள்

ரெடியா இருங்க மக்களே…! ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்… அப்படி என்ன சொன்னாரு …!!

தமிழகத்தில் வரி, மின்சாரக்கட்டணம் உயர போகுது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது உரிமை மீறல், சட்டமன்றத்தின் சட்டத்தை மதிக்காமல்.. பேரவை  விதிகளை மதிக்காமல்….  எல்லாமே இவர்கள் இஷ்டத்துக்கு கையில் எடுத்துக்கொண்டு,  இவர்களே வெளியே சொல்லுறாங்க என்றால்…. சட்டமன்றம் இரண்டு மூணு மாசம் பொறுத்து நடக்குது அந்த சூழ்நிலையில் சொல்லலாம் ஒரு நாலு நாள் நடக்கும் போது வெளியே சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு.

ஒரு புதுக்கட்சி ஆட்சிக்கு வந்தால் கூட தெரியாதுன்னு சொல்லலாம். ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சி திமுக. முதல்வர் முக.ஸ்டாலின், இப்போதைய நிதியமைச்சர் எத்தனையோ தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர்கள் அனைவருக்கு பட்ஜெட் டாக்குமெண்ட் கொடுக்குறோமே.. அதில் எவ்வளவு கடன் இருக்கு ? எவ்வளவு வருவாய் இருக்கு ? எவ்வளவு வருவாய் செலவினம் ? எவ்வளவு பொதுத்துறை நிறுவனகளுக்கு நஷ்டம் ? எப்படி அதை ஈடுக்கட்டுவது ? என எல்லாமே அதில் சொல்லி இருக்கோம்.

அப்படி சொல்லி இருக்கும் போது அவசரம் அவசரமாக 13ஆம் தேதிக்கு முன்னாடி 9ஆம் தேதியே வெள்ளை அறிக்கை கொடுக்கின்றார்கள் என்றால் ? மக்களை திசை திருப்பி, தயார் படுத்தி, எல்லாரும் பேருந்து கட்டண உயர்வுக்கு ரெடியா இருங்க.. கண்டிப்பா நடக்கும் பாருங்க. சொத்து வரி ரெடியா இருங்க… மின்சார கட்டண உயர்வு வர போகுது.

இப்போதே பார்த்தால் வீட்டில் ஒரு பேன் இல்ல, டிவி இருக்கு, ஒரு லைட் இருக்கு 400 கட்டியவன், இன்று 3000 கட்டும் நிலைமை…. உண்டா ? இல்லையா ?  எல்லாம் அணில் பண்ற வேலை இது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Categories

Tech |