Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்! மீண்டும் பரவும் கொடிய வைரஸ்…. எச்சரிக்கை விடுக்கும் வல்லுநர்கள்…!!

ஆசிய நாடுகளில் மீண்டும் பன்றி காய்ச்சலை ஏற்படுத்தும் கொடிய வைரஸ் பரவி வருவதால் அச்சம் நிலவியுள்ளது.

உலகமுழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்னும் கொரோனாவை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் ஆசிய நாடுகளில் பன்றி காய்ச்சல் ஏற்கனவே பரவி பன்றிகளை கொன்று குவித்த நிலையில் தற்போது மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக இது சீனாவில் முன்னதாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது சீனா இந்த நோய்த்தொற்றை எப்படியோ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஆசிய நாடுகளில் பன்றி காய்ச்சல் பரவி வருவதால் கடுமையான விளைவுகளை சந்திக்கலாம் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பன்றிக்காய்ச்சல் வைரஸ் ஆனது வியட்நாம், சீனா மற்றும் மலேசியாவுக்கும் பரவியுள்ளது.. பன்றிக்காய்ச்சல் பல நாடுகளில் தற்போது பரவி வருவதால் காரணமாக இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பன்றிக்காய்ச்சல் பன்றிகளுக்கு தான் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. மனிதர்களுக்கு பரவியதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த கொடிய வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.

Categories

Tech |