Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்! “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண…. அழைத்து மூதாட்டியிடம் திருட்டு…!!

மர்ம ஆசாமி ஒருவர் குழந்தைக்கு ஆசீர்வாதம் பண்ண அழைத்து மூதாட்டியிடம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை லாயிட்ஸ் காலனியை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாத்தின் தாய் ராவணம்மா. இவர் சம்பவத்தன்று மதியம் மயிலாப்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து பக்கத்தில் இருந்த வீட்டை காட்டி அங்கு குழந்தைக்கு நிகழ்ச்சி நடைபெறுவதால் உங்களைப் போன்ற பெரியவர் வந்து குழந்தைக்கு ஆசிர்வாதம் வழங்கினால் குழந்தையின் வாழ்க்கை செல்வ செழிப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டியும் அவரிடம் சென்றுள்ளார். மூதாட்டி அழைத்து சென்ற அவர் அங்குள்ள வீட்டில் அமர வைத்துவிட்டு செல்போன் பேசுவது போன்று மேலே ஏறி சென்றுள்ளார்.

திரும்பி வந்த அவர் குழந்தையை பெற்றோர் மிகவும் சேர்ந்தவர்கள் என்பதால் ஆசீர்வாதம் வழங்கி வரும் வயதானவர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்குவதாக கையில் அணிந்திருக்கும் மோதிரங்களை அளவுக்காக கழட்டி தரும்படி கேட்டுள்ளார். இதனால் இன்னொரு மோதிரம் கிடைக்கும் என்ற ஆசையில் கையில் இருந்த மூன்று மோதிரங்களை மர்ம ஆசாமி எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இன்னொரு மோதிரத்துக்காக காத்திருந்த மூதாட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

வெகுநேரமாகியும் மோதிரமும் திரும்பி வரவில்லை. மர்ம ஆசாமியும் திரும்பி வரவில்லை. நீண்ட நேரமாகியும் காத்திருந்த மூதாட்டிக்கு ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து காவல்துறையினர் விசாரித்ததில் இதே பாணியில் பல திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. “மின்னுவதெல்லாம் பொன்னல்ல” என்ற பழமொழிக்கு ஏற்ப யார் என்ன சொன்னாலும் நம்பி அவர்களுடன் செல்வது ஆபத்து என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |