பூமியை நோக்கி தற்போது ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடத்தில் பூமிக்கு பக்கத்தில் பல்வேறு விண்கற்கள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதேபோன்று ஜனவரி மாதத்தில் விண்கற்கள் பூமிக்கு பக்கத்தில் வந்து சென்றன. இந்த வருடத்திலும் பல்வேறு கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்படி 2020XU6 என்ற மிகப்பெரிய விண்கல் பூமியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 213 மீட்டர் நீளம் கொண்டது. இது அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட இரண்டு மடங்கு பெரியது என்று கூறப்படுகிறது. தற்போது மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்தில் வருவதாக கூறப்படுகின்றது.
விண்கல் பூமியை ஒரு மணி நேரத்தில் சுற்றி வர முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த விண்கல்லால் பூமிக்கு மிக மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் இந்த விண்கல் பூமியை மோதுவதற்கு வாய்ப்பு இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. சுமார் 470 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய குடும்பம் உருவானபோது ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய சிதைவுகள் தான் இந்த விண்கல் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சூரியனை சுற்றி பல லட்சக்கணக்கான விண்மீன்கள் சுற்றி வருகின்றன என்று கூறியுள்ளது.