தமிழகத்திலும் உருமாறிய கொரோனா பரவியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கிருந்து வந்தவர்களின் மூலமாக கேரளா, இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு ஒரு மாறிய வீரியம் மிக்க கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் பிரிட்டனில் இருந்து வந்தவர் ஆவார். அந்த நபருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு,அவருக்கு தனி அறையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
லண்டனில் இருந்த 17 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. ஆனால் அதில் ஒருவருக்கு மட்டுமே வீரியமிக்க தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 15 பேரில் ஒருவருக்கு மட்டுமே வீரியமான கொரோனா பரவியுள்ளதாக முடிவு வந்துள்ளது. மீதி 16 பேரின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் தொற்று பரவியுள்ள இந்த நபரோடு தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தொற்று பரவவில்லை என்று கூறப்படுகின்றது. எனவே மக்கள் கவனமுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.