Categories
தேசிய செய்திகள்

“மக்களே எச்சரிக்கையாக இருங்கள்”… வாட்ஸப் மூலம் வருமானம்… நம்பாதீங்க..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வியூஸ் மூலம் தினமும் பணம் சம்பாதிக்கலாம் என்று செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.

கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வியூஸ் மூலம் தினமும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்கலாம் என்ற செய்தி அதனுடன் கூடிய ஒரு லிங்க் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் க்கு 30 வியூஸ் இருந்தால் வருமானம் என்பன போன்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனை யாரும் நம்ப வேண்டாம்.

இதில் நம்முடைய வாட்ஸ்அப் எண்ணை ரெஜிஸ்டர் செய்த உடன் ஒரு லிங்க் ஒன்று கொடுக்கப்பட்டு, அதனை தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வையுங்கள்.  24 மணி நேரத்தில் நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம் என்று இணையத்தில் குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு செய்தால் தங்களுக்கு விளம்பரம் அனுப்புவோம். அதற்கான கட்டணத்தை தங்களது Phonepe, UPI ID இதன் மூலம் உங்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இது போன்ற இணையதளங்கள் தங்களது UPI ID, PHONE PE GOOGLE PAY, PAYTM போன்ற தகவல்களை பெற்று அந்த தகவல்களை ஹேக் செய்து விற்று, அதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். தங்களது வங்கி கணக்கின் விவரங்கள் கொண்டு உங்களது கணக்கில் உள்ள பணத்தை திருடுகின்றனர். தங்களது வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் சம்பாதிக்கலாம் என்று பரவக்கூடிய செய்தி உண்மையானவை அல்ல. இதனால் யாரும் இதை நம்பாதீர்கள்.

Categories

Tech |