Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! உங்கள் போனில் – தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு…!!

தடுப்பூசி அளிக்க கோரி போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது புதிதாக வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியி ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து ஆதார் எண்ணை அளிக்க கோரி பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஒடிபி வரும் என்று கூறி நமது விவரங்கள், வங்கித் தொகை ஆகியவற்றை திருடுவதாக கூறியுள்ளது.

Categories

Tech |