Categories
மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு பரிந்துரை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் புதிய திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ‘ஆரோக்கியம்’ திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சிகிச்சை பெற்ற பின் மக்கள் உடல் நலத்தை பேண ஆரோக்கியம் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் வைத்தார்.

இதனை தொடர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு சதிக்காக மட்டுமே என விளக்கம் அளித்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |