Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“அவ எங்களை ஏமாத்திட்டாள்” பொதுமக்கள் அளித்த புகார்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பெண் மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக லதா மாத சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரை நம்பி ஏராளமான மக்கள் சீட்டு பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில் லதா சமீபகாலமாக சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணத்தை கொடுக்கவில்லை.

மேலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லதாவின் வீடு பூட்டி கிடக்கிறது. இதனால் சீட்டு பணம் கட்டிய பொதுமக்கள் மத்திய காவல் நிலையத்திற்கு சென்றனர். அதன் பிறகு பொதுமக்கள் சீட்டு நடத்தி லதா லட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |