Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி ஒரு வாரத்திற்கு கடை கிடையாது… கோரிக்கை விடுத்த மக்கள்… கூட்டம் கூடியதால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணாமாக ரேஷன் கடை திறக்காததால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காடு கிராமத்திலிருக்கும் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 7 மணி முதலே பொதுமக்கள் கடைக்கு சென்றுள்ளனர். இதனால் கடையில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுக்குறித்து தகவலறிந்த பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது முழு ஊரடங்கு வரை ரேஷன் கடை கிடையாது என்று கூறியுள்ளனர். இதனால் அறிவிப்பு பலகையில் ஊரடங்கு காரணமாக கடை விடுமுறை என்று பிரதிநிதிகள் எழுதி போட்டுள்ளனர். இதனையடுத்து நீண்டநேரம் காத்திருந்த மக்கள் மே மாதத்திற்குள்ள ரேஷன் பொருட்களை ஜூன் மாதம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஏமாற்றத்துடன் களைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |