Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்க முயற்சி வீணாகிறது… பூண்டு வாங்க 5 கிலோமீட்டர் தூரம்… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக வரும் பொதுமக்களால் காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டிகே மார்க்கெட், ரங்கே கவுடர் வீதி போன்ற பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் காலை 10 மணி வரை அதிகமாக காணப்படுகிறது.

இதனையடுத்து ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க சொல்கிறோம் என கூறி தேவையில்லாமல் பலர் கடை வீதிகளில் சுற்றித் திரிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பூண்டு வாங்குவதற்காக ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் டிகே மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டும் எனவும், தேவையில்லாமல் வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அத்தியாவசிய தேவைகளை வாங்க செல்கிறோம் என கூறி வீதிகளில் சுற்றித் திரிந்தால் கொரோனா பரவலை தடுப்பதற்காக போராடும் முன்கள பணியாளர்களின் முயற்சி வீணாகிவிடும் என தெரிவித்துள்ளனர். எனவே அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |