Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இப்படித்தான் வரணும்… இல்லைனா 2௦௦ ரூபாய் அபராதம்… சென்னையில் தீவிர பாதுகாப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பொதுமக்கள் கூடி கடற்கரையில் பொழுதைக் கழிப்பர். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், மற்றும் வருகின்ற 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் தினத்தன்று மட்டும் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து மெரினா கடற்கரைக்கு செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கவசம் அணியாமல் மெரினா கடற்கரைக்கு வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் போலீசாருடன் மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து மெரினா கடற்கரையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Categories

Tech |