Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடனே வாங்கனும்… அப்போதுத்தான் நிவாரண தொகை கிடைக்கும்… அலுவலகத்தில் குவிந்த மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளை வாங்க தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் கொரோனா நிவாரண தொகை 4000 வழங்குவதாக வாக்குறுதிகள் அறிவித்திருந்த நிலையில் தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனால் நிவாரண தொகை திட்டத்தின் முதல் கட்டமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 வழங்கி தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்பதால் ஜனவரி மாதத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வாங்க அலுவலகம் முன்பு மக்கள் குவிந்துள்ளனர். இதனை தொடர்ந்து அலுவலக அதிகாரிள் பொது மக்களை வரிசைப்படுத்தி புதிய ரேஷன் கடைகளை வினியோகம் செய்துள்ளனர்.

Categories

Tech |