Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எப்படியாவது விடுபடனும்… சித்தா மருத்தை தேடி… அலை மோதிய மக்கள் கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத கடைகளில் நாட்டு மருந்துகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமென்றும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சித்தா, ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் கொரோனாவிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலானோர் சித்த மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் சேலம் சின்ன கடை வீதியிலுள்ள  நாட்டு மருந்து கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கு கபசுரக் குடிநீர் பொடியை அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.

Categories

Tech |