டோங்கோ நாட்டில் உருவான சுனாமியால் பலியானவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.
டோங்கோ என்ற பசிபிக் தீவு நாட்டில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல தீவுகள் இருக்கிறது. அதில் தீவுகள் சிலவற்றில் எரிமலைகள் இருக்கின்றது. இதில், கடலுக்கு அடியிலும் சில எரிமலைகள் இருக்கிறது. இதனிடையே அந்நாட்டில் கடலின் அடியில் இருந்த ஒரு எரிமலை கடந்த மாதம் 15ம் தேதியன்று பயங்கரமாக வெடித்து சிதறியது.
இதனால் சுனாமி உருவாகி, அதன் தாக்குதலில் டோங்கோ தீவானது நிலைகுலைந்து போனது. இதில், 6 நபர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும் பலர் மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு சுனாமியால் பலியானவர்களுக்கு மாநிலங்களவையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு மாநிலங்களவையின் தலைவரான வெங்கையாநாயுடு, டோங்கோ நாட்டிற்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.