போலி சாமியார் ஒருவர் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிற்கு சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டமாக வருவதாகக் கூறி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்ற போலி சாமியாரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்ததாக சொல்லிய சந்தோஷி, அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மறுநாள் வருமாறு கூறியிருக்கிறார்.
இதையடுத்து மறுநாள் சென்ற அந்தப் பெண்ணிடம், சந்தோஷி சூனியம் எடுப்பதாக சொல்லி பழுக்க காய்ச்சிய கம்பியை அந்த பெண்ணின் உடல் முழுவதும் சூடு வைத்துள்ளார். இதனால் வலியால் அலறி துடித்த அந்தப் பெண் இப்போது மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலி சாமியார் சந்தோஷி உட்பட 3 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.