Categories
மாநில செய்திகள்

மக்களே! போகிப்பண்டிகையன்று இந்த பொருட்களை…. எரிக்க வேண்டாம் – மாசு கட்டுப்பாடு வாரியம்…!!

போகிப்பண்டிகையன்று குறிப்பிட்ட இந்த பொருட்களை எரிக்க மாசு கட்டப்பட்டு வாரியம்  விதித்துள்ளளது.

வருகிற 14-ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின்போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |