காபூலில் விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு பயணித்த மக்கள் கீழே விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, மக்கள் நாட்டிலிருந்து தப்பித்து வருகிறார்கள். எனவே, காபூல் விமான நிலையத்தில் மக்கள் பலர் குவிந்ததால் அங்கு நிலை மோசமானது. எனவே அதிகாரிகள் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.
صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ پر فائرنگ کر رہے ہیں جبکہ کابل ائیرپورٹ پر نہتے لوگوں پر فائرنگ کرنے والے امریکی ہیں ناکہ اسٹوڈنٹس
عوام کے جم غفیر نے جب کابل ائیرپورٹ کا رخ کیا ۔1/2#Talibans #Kabul pic.twitter.com/US2akbLYon— Nauman Shahzad (@nomi_JKUM) August 16, 2021
இந்நிலையில், அமெரிக்க அரசு தங்கள் ராணுவ விமானத்தை அனுப்பி மக்களை வெளியேற்ற முடிவெடுத்தது. எனவே காபூலின் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்நிலையில் காபூல் விமான நிலையத்திலிருந்து சென்ற விமானத்தின் பின்பு மக்கள் ஓடியுள்ளர்கள்.
صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ پر فائرنگ کر رہے ہیں جبکہ کابل ائیرپورٹ پر نہتے لوگوں پر فائرنگ کرنے والے امریکی ہیں ناکہ اسٹوڈنٹس
عوام کے جم غفیر نے جب کابل ائیرپورٹ کا رخ کیا ۔1/2#Talibans #Kabul pic.twitter.com/US2akbLYon— Nauman Shahzad (@nomi_JKUM) August 16, 2021
அப்போது, விமானம் வானத்தில் பறந்த சமயத்தில், அதிலிருந்து சில பயணிகள் கீழே விழுகின்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலிருந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணத்தில் விமானத்தின் சக்கரத்தை பற்றிக்கொண்டு சிலர் பயணித்துள்ளார்கள்.
Kabul moment! pic.twitter.com/nj5WKiH9dM
— Lotfullah Najafizada (@LNajafizada) August 16, 2021
அவர்கள் தான் நடுவானில் விமானத்திலிருந்து கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்தவர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை.