மது அருந்தினால் ஏழு வகையான புற்றுநோய்கள் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று கூறுவதுடன் சரி அதை யாரும் பின்பற்றுவதில்லை. இந்தியாவில் அதிக அளவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதேசமயம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. மது அருந்துவதற்கும் ஏழு வகையான புற்று நோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகின்றது. கொஞ்சமாக மது குடித்தாலும் அது தொடர்பாக இருக்கும் நிலையில் அதுவும் ஆபத்துதான் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.