Categories
மாநில செய்திகள்

மக்களே! தடுப்பூசி போட்டாலும்…. இதெல்லாம் கட்டாயம் – சுகாதாரத்துறை அமைச்சர்…!!

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிதல் கட்டாயம்  என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். மேலும் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ளசிம்ஸ்  மருத்துவமனையில் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியுள்ளது. இதில் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 75 பேர் வீதம் தடுப்பூசி போடப்பட உள்ளது.

முகாமின் தொடக்க விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணியானது இலக்கு நோக்கிய திட்டம் கிடையாது. தடுப்பூசியை மக்கள் போட்டுக் கொண்டாலும் அதன் பிறகு முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் பயன்படுத்தல் போன்றவை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |