Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்! டோக்கன் வாங்கலனாலும்…. ரூ.2500 கிடைக்கும்….!!

டோக்கன் வாங்காதவர்களும் பொங்கல் பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பரிசுப் பொருட்களாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சீனி, ஒரு கரும்பு, முந்திரி 20 கிராம், 20 உளர் திராட்சை, 10 கிராம் ஏலக்காய், மற்றும் 2500 பணம் வழங்கப்படுகிறது. இதில் டோக்கன் வாங்காத ரேஷன் கார்டுகளுக்கும் டோக்கன் பெற்றவர்கள் வாங்கி முடித்த மறு நாளிலிருந்து தடையின்றி பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |