வடக்கு அயர்லாந்தானது, பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அயர்லாந்துடன் சேர்ந்திருப்பதால் சில மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.
பிரிட்டனின் ஒரு பகுதியாக வட அயர்லாந்து உள்ளது. ஆனால் நில பரப்பின் அடிப்படையில் அயர்லாந்துடன் சேர்ந்துள்ளது. இதனால் சில மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, அயர்லாந்தில் பிறந்த மக்கள் வட அயர்லாந்தில் தான் அதிக காலமாக வசித்து வருகிறார்கள்.
இதனால் பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைப்பதில் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது வடஅயர்லாந்தின் முன்னாள் சபாநாயகரான Lord Hay, அயர்லாந்தில் பிறந்திருக்கிறார். எனினும் வட அயர்லாந்தில் வாழிட உரிமை பெற்று அதிக காலம் வாழ்ந்து வந்துள்ளார். அவர் பிரிட்டன் பாஸ்போர்ட் பெற பல சிக்கல்களை சந்தித்துள்ளார்.
இதே போன்று ஒரு பெண் அமெரிக்காவைச் சேர்ந்த அவரின் கணவருக்காக வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்திருக்கிறார். அவரை பிரிட்டன் குடிமகள் என்று உள்துறை அலுவலகம் எண்ணியதால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனினும் அந்த பெண் அயர்லாந்து பாஸ்போர்ட் தான் வைத்திருக்கிறார். பிரிட்டன் பாஸ்போர்ட் அவரிடம் இல்லை. மேலும் அவர்கள் பிரிட்டன் பாஸ்போர்ட் பெற தேர்வு எழுதி, அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இது போல பல குழப்பங்கள் உள்ளன. எனவே இந்த நடைமுறைகளை நீக்க வேண்டும் என்று வடஅயர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.